16 வயது சிறுவன் அரங்கேற்றிய சம்பவத்தால் பொலிஸார் ஷாக்!
புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்மல் ஓயா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனொருவனே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கி 72 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.

கி 72 வயதான முச்சக்கரவண்டி சாரதி கொலை
முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் பின்னர், முச்சக்கரவண்டியுடன், சாரதியிடமிருந்த பணத்தையும் திருடிக் கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.