தமிழர் பகுதியில் 15 வயது சிறுமியின் பகீர் செயல்; மருத்துவமனையில் அம்பலமான ரகசியம்
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் உறவினை வைத்திருந்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறுமியுடன் உறவு வைத்திருந்த முள்ளியவளை பகுதியினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரை முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
காதலனுக்கு வலைவீச்சு
முல்லைத்தீவு முள்ளியவளை புதறிகுடா பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமி வைத்திய சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சென்றுள்லார்.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனையில் குறித்த சிறுமி ஆண்களுடன் உறவு கொண்டமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் காதலன் ஒருவரும், குடும்பஸ்தர் ஒருவரும் சிறுமியுடன் உறவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த முள்ளியவளை பொலீசார் சிறுமியுடன் உறவினை வைத்த காதலனை தேடி வலைவிரித்துள்ளனர்.
மேலும் கைதான குடும்பஸ்தரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.