இரு தினங்களில் 15 பேருந்து சாரதிகள் கைது
கடந்த இரு தினங்களில் போதைப்பொருட்களைப் பாவித்த நிலையில் பஸ்களைச் செலுத்தியதாகக் கூறப்படும் 15 பஸ் சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களைப் பாவித்து ஓட்டுநர்கள் பஸ்களைச் செலுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேல்மாகாணத்தை மையமாகக் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
106 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரின் பங்களிப்புடன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 775 பஸ்களை சோதனை செய்து, அந்த பஸ்களின் சாரதிகளின் எச்சிலை சோதனை செய்ததில், 15 சாரதிகள் போதைப்பொருள் பாவித்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கைதான சாரதிகளின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.