இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகள் திறப்பு; வெளியேறும் மக்கள்
வடக்கு கிழக்கில் கொட்டித்தீக்கும் மழையால், கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புக்களில் வெள்ளம் சூழ்ந்ததுள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பால் வடக்கின் மிகப்பெரிய நீர்பாசன குளமான இரணைமடுக் குளத்தின் 14 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களில் மக்கள்
இதனால் பெருமளவான வெள்ள நீர் வெளிவேறி மக்கள் குடியிருப்புக்கள், விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 1043 குடும்பங்களைச் சேர்ந்த 3524 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை வட்டக்கச்சி ஊடாக கண்டாவலை செல்லும் பிரதான வீதியில் புளியம்பொக்கனை பகுதியில் வீதி குறுக்கரத்து வெள்ளம் பாய்வதன் காரணமாக பெரியகுளம் வட்டககச்சி செல்லும் வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.