இலங்கை மக்களை மகிழ்விக்க களமிறங்கிய 14 கப்பல்கள்!
இலங்கைக்கு ஏற்கனவே கோரப்பட்ட விலைமனுவிற்கு அமைய, 14 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் நாமல் ஹேவகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 5 நிலக்கரி கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் நிலக்கரியை கொண்டுவருவதற்கான விலைமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, வேறு முறைமையின் மூலம் மேலும் மேலும் 12 நிலக்கரி கப்பல்களை நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3 நிலக்கரி கப்பல்கள் மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மேலும் 28 நிலக்கரி கப்பல்களை கொண்டுவர தயாராகுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.