தேயிலை கொழுந்து பறித்த வேளையில் நடந்த விபரீதம்!
குளவிக்கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
பொகவந்தலாவ கொட்டியாகல தோட்டப் பிரிவில் இன்று மதியம் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
கொட்டியாகல பிரிவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்துள்ளது.
அதன்போதே தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 12 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களைக் குளவி கொட்டியுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கான 14 தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் 35 வயது தொடக்கம் 53 வயது உடையவர்கள் என்று வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.