இலங்கை கடற்கரையில் கரையொதுங்கிய 14 திமிங்கலக் குட்டிகள்!(Photos)
புத்தளம் - கல்பிட்டி குட்வா ஓஷன் வியூ பீச் சுற்றுலா விடுதிக்கு அருகில் உள்ள கடற்கரையில் இன்று காலை 14 திமிங்கலக் குட்டிகள் கரை ஒதுங்கியுள்ளது.
எனினும் அதில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்ததாகவும் கல்பிட்டி வனவிலங்கு தள பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரைக்குவந்த 11 திமிங்கலக் குட்டிகள் மிகுந்த முயற்சியுடன் கடலுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதே அலுவலகம் கூறுகிறது.
இலங்கை - கல்பிட்டி கடற்கரையில் 10 க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.
— Kᴀʙᴇᴇʀ - ஆட்டோ கபீர் (@Autokabeer) February 11, 2023
அவற்றை மீண்டும் கடலுக்கு அனுப்பும் நடவடிக்கையை கிராம மக்கள், கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மேற்கொண்டனர் pic.twitter.com/tDFlRyM3s2
இந்த திமிங்கலங்கள் திமிங்கல பைகலாட் கௌல்பஸ் இனத்தைச் சேர்ந்தவை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.