பழ.நெடுமாறனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை ; 13 வது திருத்தமே தீர்வு!(Video)
தமிழகத்தின் மூத்த அரசியவாதி பழ.நெடுமாறன் விடுதலைபுலிகளின் தலைவர் தொடர்பில் கூறிய கருத்துக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்
அதாவது விடுதலைபுலிகளின் தலைவர் தொடர்பில் பழ.நெடுமாறன் இவ்வாறான கருத்துக்களை 2009 ஆண்டுமுதல் இதேபோல கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி அரசாங்கம் அதையெல்லாம் தாண்டிவிட்டதாக தெரிவித்த அண்ணாமலை, இலங்கையை பொறுத்தவரை இந்தியாவை நம்பியே பல அபிவிருத்தி நடவடிக்கைகள் இலங்கையின் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது இலங்கையை பொறுத்தவரை 13 அமர்வு மட்டுமே இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வு என்பதில் மோடி அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.