ஹொக்கி பயிற்சி முடித்து நீராடச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்
கம்புருபிட்டிய, கிராம்ப ஆரா ஓயாவில் நேற்று 13 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம்ப ஆரா ஓயா சபுகொட பிரதேசத்தில் குழுவொன்று குளித்துக் கொண்டிருந்த போது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீராடச் சென்ற சிறுமி
பாடசாலையில் ஹொக்கி பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது சிறுமி ஒன்பது நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி கம்புருபிட்டிய, உல்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.