இந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கனடாவிற்கு விசா இன்றி வரலாம்
ஆபத்துக்கள் குறைந்த பயணிகள் வீசா பெறுவதற்காக விண்ணப்பம் செய்யாது கனடாவிற்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய குடிவரவு அமைச்சர் சேன் ப்ரேசர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சுமார் 13 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இவ்வாறு கனடாவிற்குள் பிரவேசிக்கும் போது வீசா சலுகை வழங்கப்பட உள்ளது.
கனடாவிற்குள் பிரவேசிப்பதற்காக இல்லத்திரனியில் பயண அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக டிஜிட்டல் பயண அனுமதியை வெறும் ஏழு டாலர்களுக்கு சில நிமிடங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில், அன்டிகோவா அன்ட் பார்புடா, ஆர்ஜன்ன்டினா, கஸ்டோரிக்கா, மொரோக்கோ, பனாமா, பிலிப்பைன்ஸ், சென் கீட்ஸ் அன்ட் நிவிஸ், சென் லூசியா, சென்வின்சன் அன்ட் கிரான்டெனிஸ், தாய்லாந்து, சீசெல்ஷ், டிரினிடாட் அன்ட் டுபாகோ, உருகுவே ஆகிய நாடுகளின் பயணிகள் துரித கதியில் கனடாவிற்குள் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளுக்குள் கனடா வீசா கொண்டவர்கள் அல்லது அமெரிக்காவின் வதிவிடமற்ற வீசா பெற்றுக் கொண்டவர்கள் இவ்வாறு இலகுவில் வீசாவை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே பயணமம் செய்த குறித்த நாடுகளின் பயணிகளுக்கு வீசா விண்ணப்பங்களின் பொது சலுகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.