யாழில் 13 இந்திய மீனவர்கள் கைது; இருவர் மருத்துவமனையில்
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று (28) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் மருத்துவமனியில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கைது நடவடிக்கையின்போது இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.

பருத்தித்துறை கடற்பரப்புக்குள் மீன்பிடி
தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஒரு படகில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மீனவர்கள் அனைவரையும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளின் பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        