விபத்தினால் நேற்று மட்டும் 12 பேர் பலி!
நாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற விபத்துக்களில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் களில் 12 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்துக்களில் மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
நாட்டில் விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்பொழுது போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மற்றும் கவனயீனமாக வாகனங்களை செலுத்துதே எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு குறித்த காலப் பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்த ஐவரில் மூவர் பாதசாரிகளாவர். எனவே, வீதிகளில் நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களும் வீதிகளில் செல்பவர்கள் உள்ளிட்ட வேறு நபர்களும் அதிக எண்ணிக்கையில் உயிரிழக்கின்றதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
எனவே மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளானால் படுகாயமடையக் கூடிய மற்றும் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.