12,500 கிலோகிராம் வாழைப்பம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி!
இலங்கையிலிருந்து கதலி வாழைப்பழத்தின் முதலாவது தொகுதி இன்று துபாய்க்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்நிலையில் இராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கதலி வாழைப்பழங்கள் முதன்முறையாக வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
12,500 கிலோகிராம் கதலி வாழைப்பழங்கள்
அதற்கமைய, 12,500 கிலோகிராம் கதலி வாழைப்பழங்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. அதேவேளை எதிர்வரும் காலங்களில் உள்நாட்டு கதலி வாழைப்பழங்களை பிரதி சனிக்கிழமைகளில் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த வாழைப்பழ ஏற்றுமதி இதனூடாக வாரத்திற்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.