நாய்களை ஏற்றிச்செல்லும் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள்
தலிபான்களிடம் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான அப்கானிஸ்தான் பிரஜைகள் காபூல் விமான நிலயத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு நிற்கையில், அந்த மக்களை அப்படியான ஒரு நிலைக்குத் தள்ளியிருந்த மேற்குலகம் செய்துவருகின்ற செயல்கள் நடுநிலையான நோக்கர்களின் பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.
கடந்த 20 வருடங்களாக அமெரிக்கச் சார்பு நிலைப்பாடு எடுத்ததன் காரணமாக தலிபாண்களால் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், எப்படியாவது அப்கானிஸ்தானைவிட்டுத் தப்பித்துச் சென்றுவிடவேண்டும் என்று ஆயிரக் கணக்கான அப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் தவித்துக்கொண்டு நிற்கையில், அமெரிக்க இராணுவத்தின் நாய்கள் விமானங்களில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சி இன்று உல ஊடகங்களில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு பக்கம் நெருக்கி அடித்துக்கொண்டு மக்கள் மிருங்கள் போன்று விமானங்கள் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட, மறு பக்கம் ராணுவ நாய்களுக்கு தனி இருக்கைகள் வழங்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்ற காட்சிகளும் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.

