சிறியதாயின் கொடுமை தாளாது 11வயது சிறுமியின் அதிரடி முடிவு!
தந்தையின் இரண்டாவது மனைவியின் துன்புறுத்தல் தாங்க முடியாத 11 வயது சிறுமி 4 கிலோ மீற்றர் துாரம் தனியாக நடந்து சென்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருகையில்,
தாயார் மரணம்
சிறுமியின் தாய் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணித்து விட்டதாகவும், பின்னர் அவரது தந்தை ஒரு மகளுக்கு தாயான விதவையை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் பொலிாஸர் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலையத்துக்கு வந்த சிறுமி, தனது சித்தி தனது மகளிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்வதாகவும், ஆனால் தன்னை நிராகரித்து தொல்லை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சித்தியின் தொல்லை தாங்க முடியாமல் சிறுமி கதறி அழுதவாறே பொலிஸாரிடம் வந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி தனது வீட்டிலிருந்து பொலிஸ் நிலையத்துக்கு சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே வந்து முறைப்பாட்டை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.