காதலனுடன் 10ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு ; நடந்தது என்ன?
இந்தியாவில் பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் 10 வகுப்பு மாணவியும் அவரது காதலனும் மாணவியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மாணவியும் அவரது காதலனும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்த போது இவர்களது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாணவியின் வீட்டில் குறித்த மாணவி மாத்திரம் இருப்பதை அறிந்த காதலன் மாணவின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டுள்ளனர்.
மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய வந்து பார்த்த போது இருவரும் தூக்கிட்டு கொண்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கத்தியுள்ளனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு இதுகுறித்து ஆலங்குளம் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவியின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும், ஆகாஷ் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குளம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.