ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் 1000 பேர் கைது
நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் 'முழு நாடுமே ஒன்றாக' திட்டத்தின் கீழ் நேற்று (07) நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 1087 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, இதன்போது 583 கிராம் ஐஸ் போதைப்பொருள், 416 கிராம் ஹெரோயின் மற்றும் குஷ், கஞ்சா உட்பட பல சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான சந்தேக நபர்களில் 11 பேருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 16 பேர் மறுவாழ்வுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமாரவின் வழிகாட்டலில் நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முழு நாடுமே ஒன்றாக திட்டம் ஒக்டோபர் 30ஆம் திகதி தொடங்கப்பட்டது.