மிரள வைத்த திருமண பரிசு ; மணமகன்களுக்கு 100 அடி நீளம் ரூ.1 கோடி மதிப்பில் பண மாலைகள்
உத்தரப்பிரதேசமாநிலம் மதுராவில் நடைபெற்ற திருமண விழாவில், 2 மணமகன்களுக்குத் தலா ரூ.1 கோடி மதிப்பிலான பண மாலைகள் அணிவிக்கப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
உத்தரப் பிரதேச நடைபெற்ற திருமண ஊர்வலத்தின்போது,இரு மணமகன்களுக்கும் தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பிலான பணமாலைகளை அணிவித்துள்ளனர்.

சமூக வலைதள காணொளி
500 ரூபாய் நோட்டுக் கட்டுகளால் உருவாக்கப்பட்ட இந்தப் பணமாலைகள் 100 அடி நீளம் வரை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் மாடியில் மணமகன்கள் நின்றிருக்க, பண மாலைகள் தெரு வரை நீண்டு சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து நாக்லா பாண்டா கிராம மக்கள் கூறுகையில், தங்கள் சமுதாயத்தில் மணமகனுக்குப் பணமாலை அணிவிப்பது வழக்கமான ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ளனர்.
மணமக்கள் பண மாலை அணிந்தவாறு சிறிது தூரம் குதிரைகளில் ஊர்வலமாகச் சென்றதாகவும், அவர்களுக்குப் பின்னால் சென்ற உறவினர்கள் அந்தப் பணமாலைகளைச் சுமந்து சென்றதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இந்தக் காட்சிகளைக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.