அலட்சியம் வேண்டாம்; உடல் வெளிப்படுத்தும் 10 எச்சரிக்கை அறிகுறிகள்!
நம் உடல் தினசரி வாழ்வில் சிறிய அறிகுறிகள் மூலம் பல விஷயங்களை எச்சரிக்கிறது. அப்படி உடலில் தோன்றும் சில பொதுவான அறிகுறிகள் நமக்கு எச்சரிக்கை தருவதை குறிக்கின்றது.
அந்தவகையில் இந்த 10 அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால் அதனை அலட்சியம் செய்யாதீர்க்ள். அவையாவன,

இந்த 10 அறிகுறிகள் உடலில் ஏற்பட்டால்....
அடிக்கடி கொட்டாவி விடுவது,
அடிக்கடி கொட்டாவி விடுவது, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் தூக்கக் குறைபாடும், அதிக சோர்வும் கொட்டாவி எழுவதற்கு காரணமாக இருக்கலாம்.
வாய் சுகாதார குறைபாடு
இது பெரும்பாலும் வாய் சுகாதார குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. சில நேரங்களில் அஜீரணம் அல்லது வயிற்று பிரச்சனைகள் காரணமாகவும் வாய் துர்நாற்றம் உண்டாகலாம்.
நரம்பு செயல்பாட்டில் மாற்றம்
விரல்கள் மரத்துப்போவது நரம்பு செயல்பாட்டில் மாற்றம் இருப்பதைக் காட்டுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும் இந்த அறிகுறி தோன்றும்.
எப்போதும் சோர்வாக இருப்பது
எப்போதும் சோர்வாக இருப்பது வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாகும். சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவது, சத்தான உணவு உண்பது சோர்வை விரட்ட உதவிடும். தொடர்ந்து சோர்வு நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.
முடி பலவீனமடைந்து அதிகமாக உதிரக்கூடும்
உடலில் இரும்புச்சத்து குறைவதால் முடி பலவீனமடைந்து அதிகமாக உதிரக்கூடும். இரும்புச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்வதும், தேவையான சிகிச்சை முறையும் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும்.
கண்களின் வெள்ளைப்பகுதி மஞ்சளாக மாறுவது
கண்களின் வெள்ளைப்பகுதி மஞ்சளாக மாறுவது மஞ்சள் காமாலை நோயின் அறிகுறியாகும். இது பெரும்பாலும் ஈரல் செயல்பாட்டில் பிரச்சனை இருப்பதை சுட்டிக்காட்டும்.
வாசனை உணரும் திறன் குறைவது
சில நேரங்களில் வாசனை உணரும் திறன் குறைவது உடலில் துத்தநாகம் சத்து குறைவாக இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் சளி அல்லது நோய்த்தொற்றுகளாலும் இது ஏற்படலாம்.
அடிக்கடி காதில் ரீங்கார சத்தம்
அடிக்கடி காதில் ரீங்கார சத்தம் கேட்பது சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இது நீண்ட காலம் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
கால்களில் அடிக்கடி வீக்கம்
கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுவது உடலில் நீர் தேக்கம் இருப்பதை சுட்டிக்காட்டலாம். சில சமயங்களில் இதயம் அல்லது சிறுநீரக பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். உடனடி மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.
பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம்
பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாகும். பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் உட்கொள்வது அவசியம்.