பெங்களூர் விமான நிலையத்தில் பெண்கள் உட்பட 10 இலங்கையர்கள் அதிரடி கைது!
பெங்களூரில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஒன்றில் 10 இலங்கையர்களை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் திட்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
இன்று (23) திங்கட்கிழமை பெங்களூரில் உள்ள கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உடலில் மறைத்து வைத்து சூட்சுமமாக தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த எட்டு பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்திய சுங்கப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு இணங்க இந்த கைது நடவடிக்கை சனிக்கிழமை (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானமான UL 171 இல் 140 பயணிகளுடன் இணைந்து பெங்களூருக்கு பயணித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி 1 கோடி இந்திய ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவலை அடிப்படையாக கொண்ட தங்கக் கடத்தலில் தொடர்புடைய முழு கும்பலையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொங்களூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.