இலங்கை மக்களை சூழ்ந்துள்ள ஆபத்து; சுகாதாரத் துறை தகவல்!
இலங்கை மக்களில் 10 சதவீதமான சிறுநீரக நோயாளர்கள் தங்களுக்கு நோய் இருப்பதை அறியாத நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய சிறுநீரகவியல், ரத்த சுத்திகரிப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு
உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயைச் சரியாகக் கையாளத் தவறுபவர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பல நோயாளர்கள் நோய் முற்றிய நிலையை எட்டும் வரை தங்களுக்குப் பாதிப்பு இருப்பதை உணர்வதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், உயர் இரத்த கொழுப்பு அல்லது அதிக இரத்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் முறையாக சிறுநீரகப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
எனவே மக்கள் நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது தீவிரமான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு மிகவும் அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.