JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஹோட்டல் அறையொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகவே இந்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் இது தொடர்பாகத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மறைந்த இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல், 'நிழல்', 'மதுரம்' மற்றும் 'தாகினி' ஆகிய புகழ்பெற்ற மலையாளத் திரைப்படங்களில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
நான்கு இளைஞர்களின் கனவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வந்த தனது காதலியை, பெற்றோரின் ஆசியுடன் கடந்த செப்டம்பர் மாதமே அவர் கரம்பற்றியிருந்தார்.
திருமணமாகி சில வாரங்களே ஆன நிலையில் இடம்பெற்றுள்ள இவரது திடீர் மறைவுக்குச் சக கலைஞர்கள், நண்பர்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் ஒக்டோபர் 02 முதல் 17 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 55 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 50 நபர்களுடன் 33 டிங்கி படகுகளும், ஒரு (01) கனோய் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்
கிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளுக்கு உட்பட்ட திருகோணமலை பவுல் பொயிண்ட், லங்காபட்டுன, நாயாறு, தொடுவாய், கதிரவேலி, மார்பிள் பீச், இறக்கண்டி, யாழ்ப்பாணம் சுண்டிக்குளம், கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, கோவிலன், புதுமாத்தளன், புத்தளம் முகத்துவாரம் மற்றும் கல்லாறு ஆகிய கரையோர மற்றும் கடற்பிரதேசங்களில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, முல்லைத்தீவு, மூதூர், குச்சவெளி, வாழைச்சேனை, கோட்பே, யாழ்ப்பாணம், மயிலிட்டி மற்றும் புத்தளம் ஆகிய இடங்களிலுள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 13 ஆம் திகதி தெற்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 5 நபர்களுடன் 01 பலநாள் மீன்பிடிப் படகும் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர்களும் பலநாள் மீன்பிடிப் படகும் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) இளம் உலகத் தலைவர்கள் (Young Global Leaders) பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், “நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்” என தனது உரையில் குறிப்பிட்டு, சர்வதேச அரங்கில் தனது சமூக அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்கள் திட்டத்தின் வரலாற்றில், இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பேரில் ஒருவராக ஜீவன் தொண்டமான் இடம்பெற்றுள்ளார்.
மேலும், உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகத் தலைவர்கள் திட்டத்தின் 2024ஆம் ஆண்டுக்கான கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக, ஜீவன் தொண்டமான் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
உலகளவில் அரசியல், பொருளாதாரம், தொழில்துறை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளம் தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சர்வதேச தலைமைத்துவ வலையமைப்பில் இணைக்கும் இத்திட்டத்திற்கு, கடந்த 2024ஆம் ஆண்டு ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இலங்கையிலிருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஆளுமைகளே இந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நிலையில், மலையக மக்களின் பிரதிநிதியான ஜீவன் தொண்டமானும் அவர்களில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தேசிய எல்லைகளைக் கடந்து சர்வதேச அரங்கிலும் இடம்பிடித்துள்ளமை, மலையகத்தின் இளம் தலைமுறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இம்மாநாடு நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்கான சேவை, நாளைய தினம் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இச்சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கருமபீடத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தள்ளது,
மோட்டார் சைக்கிள் பதிவு
மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுகளை, நாளைய தினம் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவில் மேற்கொள்ள முடியும்.
இச்சேவையின் ஆரம்ப நிகழ்வு நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சனிக்கிழமை (17) இடம்பெற்றது
ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ம் திகதி வரை 92 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் மீண்டும் மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
மேலதிக விசாரணை
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா கணக்குபிள்ளை வீதியைச் சேர்ந்த 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் சம்பவ தினமான சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 12ம் திகதி தற்கொலை செய்வதற்கு கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் குதித்த 19 வயது இளம் யுவதி ஒருவரை மீனவர்கள் காப்பாற்றியதுடன் கடந்த 15 ம் திகதி சித்தாண்டியில் 21 வயது இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடதக்கது.
தற்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சாரதி உரிமப் புள்ளி முறைமையின் முதன்மை நோக்கமானது, போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறும் சாரதிகளைத் தண்டிப்பதே ஆகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றில் நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்து கொண்டு இதனைக் கூறியுள்ளார்.
பயிற்சித் திட்டங்கள்
அதற்கமைய உலகளவில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் இந்த பிரபல முறையைப் பற்றி நாட்டின் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் அதற்குப் பழக்கப்படுத்துவதற்குமான ஆறு மாத முன்னோடித் திட்டம் 2027 மார்ச் 31 வரை நடைமுறைப்படுத்தப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள இம்முறையின் கீழ், சாரதி ஒருவர் செய்யும் போக்குவரத்து குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவரது சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான புள்ளிகள் சேர்க்கப்படும்.
அப்புள்ளிகளின் எண்ணிக்கை 30 ஐ எட்டும்போது, இந்த முறைமையின் மூலம் தானாகவே சம்பந்தப்பட்டவரின் சாரதி உரிமம் இடைநிறுத்தப்படும்.
உரிமம் இடைநிறுத்தப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட சாரதி அதை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
வழக்கமாக ஒரு வருட காலத்திற்கு உரிமம் இடைநிறுத்தப்படும் அதேவேளை, குறிப்பிட்ட பயிற்சித் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதன் மூலம் அக்காலத்தை மூன்று மாதங்களாகக் குறைத்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதற்கமைய, போக்குவரத்து குற்றமொன்றைப் புரிந்து அதற்கான அபராதத் தொகையை பொலிஸாரிடம் செலுத்திய பின்னர், அக்குற்றத்திற்காகப் சேர்க்கப்படவிருக்கும் புள்ளிகளை அறிவித்து சாரதியின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இதன் நோக்கம் பொதுமக்களைப் அச்சமடைய செய்வது அல்ல, மாறாக புதிய முறைமையைப் பற்றி விழிப்புணர்வூட்டி போக்குவரத்து விதிகளுக்கு அமையச் செயற்படச் சாரதிகளை ஊக்குவிப்பதே ஆகும் என வலியுறுத்தப்பட்டது.
முல்லைத்தீவு கோம்பாவில் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில், தனது வீட்டில் ஐந்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றாமல் வளர்த்து வந்த நாய் உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நாய்கள் வீதியால் பயணிப்பவர்களை மிரட்டுவதாகப் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
வழக்குத் தாக்கல்
இதனையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த கோம்பாவில் பொது சுகாதாரப் பரிசோதகர், குறித்த நாய் உரிமையாளருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது, பதில் நீதிபதி நாய் உரிமையாளரைப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன், அவரது வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் விலங்கு விசர் நோய் தடுப்பூசியை ஏற்றி, அதற்கான தடுப்பூசி அட்டைகளை எதிர்வரும் 04.12.2026 அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, நாய்களுக்கான விலங்கு விசர் நோய் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. எனவே, நாய் உரிமையாளர்கள் தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அல்லது பொது சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு தமது நாய்களுக்குத் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள முடியும்.
மேலும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கிராமம் கிராமமாகச் சென்று நாய்களுக்கு விலங்கு விசர் நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பையும் நாய்களின் நலனையும் கருத்திற்கொண்டு, வீடுகளில் நாய்களை வளர்ப்போர் உரிய தடுப்பூசிகளைத் தவறாது ஏற்றுவதுடன், அவற்றைப் பொறுப்புடன் பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் இன்புளுவென்சா காய்ச்சல் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இது குறித்துத் தொற்றுநோயியல் பிரிவின் சமூக மருத்துவ நிபுணரும் இன்புளுவென்சா தடுப்புப் பிரிவின் அதிகாரியுமான வைத்தியர் ஜீவதாரன் ஹம்சானந்தி தெரிவிக்கையில்,
நாடு முழுவதிலும் உள்ள கண்காணிப்பு வைத்தியசாலைகள் மூலம் தொற்றுநோயியல் பிரிவு இன்புளுவென்சா பரவலைக் கண்காணித்து வருவதாகவும், வாரம் தோறும் கண்டறியப்படும் தரவுகள் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
தற்போது இன்புளுவென்சா பரவல் அதிகரித்து வருவது போல் தோன்றுகிறது. வழக்கமான எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தொற்றைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவையாகவுள்ளன.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பின்பற்றப்பட்டதைப் போன்ற தனிநபர் சுகாதாரம் மற்றும் சுவாச சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பின்பற்றப்பட வேண்டும்.
பெருந்தொற்றுக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடத்தை மாற்றங்களை நாம் பராமரித்தால், காய்ச்சல் திடீரெனப் பெருமளவில் பரவுவதைத் தடுக்க முடியும்.
சுவாசப் பாதை நோய் அறிகுறிகள் உள்ள அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகும்.
கொவிட் காலத்தில் கட்டாயமாக்கப்பட்டதைப் போல் அனைவரும் முகக்கவசம் அணிவதற்குப் பதிலாக, நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் ஏனையோருக்குத் தொற்று பரவாமல் தடுக்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
இன்புளுவென்சா சிகிச்சைக்கான 'ஒசெல்டாமிவிர்' என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து, மருத்துவ விநியோகப்பிரிவு மற்றும் பிராந்திய மருத்துவ விநியோகப் பிரிவுகள் மூலமாக வைத்தியசாலைகளில் தாராளமாக விநியோக்கப்படுகின்றது என்றார்.
ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்கரும், கண்டி கெட்டம்பே ரஜோபவனாராம விகாரையின் விகாராதிபதியுமான கப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் தனது 95ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
மறைந்த கெப்பட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரரின் பூதவுடல் மீதான தகனக் கிரியை எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 4:00 மணிக்கு கண்டி, கெட்டம்பே மாநகர விளையாட்டு மைதானத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சில காலம் உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த தேரர், கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (18) காலை தமது 96வது வயதில் காலமானார்.
கெப்பட்டியாகொட சிறிவிமல அனுநாயக்க தேரர், ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயக்க தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றம் உட்பட நீதித்துறையினால் வழங்கப்படும் தீர்ப்புகளை அரசாங்கம் உறுதியாக மதித்து நடக்கும் என்றும், அந்தத் தீர்ப்புகளுக்கு அப்பால் சென்று எந்தவொரு முடிவையும் எடுக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை(18) கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
பொலிஸார் விசாரணை
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"தற்போது சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக, கடந்த காலங்களில் சலுகைகளையும் சட்டப் பாதுகாப்பையும் அனுபவித்து வந்தவர்கள், தற்போது முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
நாடாளுமன்றமே சட்டங்களை இயற்றுகின்றது அச்சட்டங்களின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களமும், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் வழக்குகளைத் தாக்கல் செய்கின்றன.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். இறுதியாக நீதித்துறை அது தொடர்பான தீர்ப்புகளை வழங்கி தீர்மானிக்கின்றது.
உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியவுடன், சிலர் 'இல்லை, அதை ஒதுக்கி வையுங்கள்' என்று கூச்சலிடத் தொடங்குகிறார்கள். அவ்வாறு நடந்தால் சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கும்?
சில குழுக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நீதிமன்றத் தீர்ப்புகளை நிராகரித்தால், ஒரு நாட்டை ஒருபோதும் கொண்டு நடத்த முடியாது.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தை உரிய நிறுவனங்களிடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளதுடன், நீதித்துறை எட்டும் முடிவுகளையும் மதித்து நடக்கின்றது.
நாம் நீதித்துறை வழங்கும் தீர்ப்புகளுக்குக் கட்டுப்படுகிறோம். அதற்கு அப்பால் சென்று வேறு எந்த முடிவுகளையும் எங்களிடமிருந்து எதிர்பார்க்க வேண்டாம்" என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
மன்னார் மடு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் வயேதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்புப் பகுதியில் இருந்து கார் ஒன்றில் நான்கு பேர் மடுத் தேவாலயம் நோக்கிப் பயணித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
மதவாச்சி வீதியூடாக மடு சந்தியை வந்தடைந்து மடு பிரதான வீதியூடாகச் சென்றுகொண்டிருந்த போது, மடு தேவாலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு முன்பு கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்குப் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மற்ற மூன்று பேரும் மேலதிக சிகிச்சைக்காகப் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையிலிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர் 55 வயதுடைய பெண் ஆவார். அவரது சடலம் பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சாரதியின் தூக்கக் கலக்கமே இந்த விபட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மடுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 07 மோட்டார் சைக்கிளை யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியை அண்மித்த பகுதியில், மர விற்பனை நடாத்தும் நபர் ஒருவரின் விற்பனை நிலையத்தினுள் , அதீத திறன் (CC) கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நிற்பதாக மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பிரகாரம் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு , சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , அதனுள் இருந்து 07 அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றினர்.
அவற்றில் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு எவ்வித பதிவுகளும் இல்லாத நிலையில் , ஏனைய மூன்று மோட்டார் சைக்கிள்களுக்கும் போலி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து 07 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றிய பொலிஸார் , அவற்றை உடைமையில் வைத்திருந்த நபரையும் கைது செய்து , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக  கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடொன்றில் இருந்து திரும்பி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசாரணைகள், மருத்துவ-தடயவியல் பரிசோதனைகள் மற்றும் சிறுவர் தொடர்பிலான நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களுக்கு மத்தியில், இலங்கை முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 4,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கப் பிரிவுப் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான சஜீவனி அபேகோன்,
அதிகாரசபைக்கு ஆண்டதோறும் 10,000 முதல் 12,000 வரையான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும், அதில் குற்றவியல் நடத்தைகள் அடங்கிய முறைப்பாடுகள் மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முறைப்பாடுகள்
அதிகாரசபைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், நீண்டகாலமாக நிலவும் பணியாளர் பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய உளச்சமூக ஆதரவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, சில வழக்குகள் தரவுத்தளத்தில் நிர்வாக ரீதியாக முடிவுக்கு கொண்டுவரப்படாமல் திறந்து வைக்கப்பட்டுள்ளன
எவ்வாறாயினும், இது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது இதன் அர்த்தமல்ல.
பெறப்பட்ட ஒவ்வொரு முறைப்பாட்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணியாளர் பற்றாக்குறை காரணமாகவே இந்த வழக்குகள் உத்தியோகபூர்வமாக முடிக்கப்பட்டு தரவுத்தளத்தில் இருந்து அகற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.
இருப்பினும், நிலுவையிலுள்ள முறைப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதில் அதிகாரசபை கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் பெறப்பட்ட முறைப்பாடுகளில் சுமார் 75 சதவீதமானவையும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை பெறப்பட்ட முறைப்பாடுகளில் 50 சதவீதமானவையும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியான உளச்சமூக உதவி அல்லது கண்காணிப்பு தேவைப்படும் முறைப்பாடுகள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ள அதேவேளையில், சந்தேகத்திற்குரிய குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான விடயங்கள் உரிய சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு நவலோக (தனியார்) வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியர்களின் ஆலோசனைக்கமையவே அவரது சுகாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மருத்துவப் பரிசோதனை
முன்னதாக கைது செய்யப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷ, நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தேசிய வைத்தியசாலையில் தற்காலிகமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகவே அவர் இவ்வாறு தனியார் வைத்தியசாலையான நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.