திருவிழாவில் தீ மிதித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!
கொழும்பு ஆமர் வீதியிலுள்ள ஆலயமொன்றின் வருடாந்த திருவிழாவில் இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்த இளம் பெண்னொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 26 வயதுடைய தாயொருவரே தீக்காயங்களால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அக்குருவிட்ட ஆராச்சிகே இரேஷா மதுரங்கனி என தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் 10 வயது குழந்தையின் தாயார் எனவும் கூறியுள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி இரவு இடம்பெற்ற தீமிப்பில் பங்கேற்ற அந்தப் பெண்ணின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், தீக்காயங்களுக்கு சிகிச்சைப் பெறாமல் வீட்டில் இருந்த குறித்த பெண் மறுநாள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.