பெருந்தொகையான போதைப்பொருளுடன் பெண் கைது
ஹெராயின் போதைப்பொருட்களோடு பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்தொகையான ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 1 கிலோ 64 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கொஹுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதியில் உள்ள களுபோவில பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர். மேலதிக விசாரணையில் சந்தேக நபரும் அவரது மனைவியும் மற்றொரு கடத்தல்காரருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.