மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் பலரும் அறியாத தகவல்!
கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் நாளுக்கு நாள் ஏதோ ஒரு விடயம் மக்களின் கவனத்தை ஈர்த்துக்கொண்டே வருகின்றது. சின்னம் சிறு மாணவர்களை மருத்துவ மாபியாக்கள் குறிவைத்த நிலையில் அது குறித்த தகவல்களை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.
சுய விளம்பரத்துக்காக அவர் இவ்வாறு நடந்துகொள்வதாக சிலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் தனது பணியை அவர் செவ்வனே செய்வதாக பலரும் மருத்துவர் பிரியந்தினிக்கு பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தான் மருத்துவராக வேண்டும் என்கின்ற அந்த ஆசையை தூண்டியவர்கள் குறித்து மருத்துவர் பிரியந்தினி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிலிருந்து,
சுயவிளம்பரம் No 1927463:
ஒரு நல்ல வைத்தியரை நோயாளி என்றும் நினைவு வைத்திருப்பான். அந்த வகையில் ஒரு நோயாளியாக என் நினைவலையில் சேமித்து வைத்துள்ள டாக்டர்கள் ..
டாக்டர் திருமதி இராஜேஸ்வரன் யாழ்ப்பாணம் கோண்டாவிலில் சிறுமியாக ஓடித்திரிகையில் , எனக்குள் டாக்டர் ஆசை ஏற்படக் காரணமானவர் . அம்மணியிடம் நோய்க்கு மருந்தெடுக்கத்தேவையில்லை. பார்த்தாலே போதும் - வருத்தம் ஓடிவிடும்.
இலட்சுமிக்கு சேலை கட்டியது போலிருப்பா ஒவ்வொரு முறையும் கிளினிக்கில் காய்ச்சல் தடிமலுக்கு காட்டிவிட்டு வருகையில் அம்மா கூறுவார் “ப்ரியா நீங்க இராஜேஸ்வரன் டாக்டர் மாதிரி வரோணும்” என்று..
எனக்கு பக்குபக்கென்றிருக்கும் .. அந்ந சீதேவி எங்கே இந்த அல்சேசன் எங்கே என்று , அடுத்தது தற்போதய வடக்கு பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் திரு கேதீஸ்வரன் அய்யா அவர்கள்.. (ரஷ்ஷியன் டாக்டர்) குரலில் தெளிவும் இனிமையும் ஒருவைத்தியரை எப்படி உயர்த்தும் என்பதன் உதாரணமாக அடிக்கடி அப்பாவால் எனக்கு காட்டப்பட்டவர்.
போரின் பின் வ்வுனியாவிற்கு இடம்பெயர்ந்தபின் சளி தடிமன் காய்ச்சல் மனேஜ்மன்ட் இவருடன்தான்.. இதற்கடுத்தது டாக்டர் திரு சத்தியலிங்கம் அய்யா அவர்கள்.. வ்வுனியாவிற்கு வந்தபின் வருடக்கணக்காக வீசிங்கின் பிடியில் சிக்கி ஒவ்வொரு மூச்சையும் வலியுடன் விட்டவளை சுகமாக்கிய தெய்வம் (ரஷ்சியன் டாக்குத்தர்)
இப்பொழுது நான் டாக்டராகியபின் என்னை நினைவுகூர்ந்து யாரும் வருகையில் ,பேசுகையில் சந்தோஷமாக இருக்கும். இதுதான் வாழ்வியலின் அனுபவிப்பே் தவிர இந்த அறணைகள் எண்ணுவது போல பேஸ்புக்கில் பொலோவர்ஸ்ஸை /லைக்கை எண்ணிக்கொண்டிருப்பதல்ல!. நிஜத்தில் ஒரு அடையாளம்.
இவை எல்லாவற்றையும் விட மொழியறியாத, பேசத்தெரியாத என் பேஷன்ட் நன்றியுடன் என்னை கண்டு தாவி ஓடி வருகையில் ஏற்படும் ஆனந்தம் என்பது ... ஆயிரம் கோபாலை கம்பி எண்ணவைப்பதற்கு சமமானது என அவர் பதிவிட்டுள்ளார்.




