சதொச அங்காடியில் வாடிக்கையாளருக்கு நேர்ந்த கதி!
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்யச் சென்றவர் மிது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “வவுனியா நகர்ப் பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்துக்கு பொருள்களைக் கொள்வனவு செய்ய சென்ற வாடிக்கையாளரொருவர், அங்குள்ள பொருள்களின் விலைகள் தொடர்பில் கடமையில் இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார்.
இதன்போது, ஊழியருக்கும் வாடிக்கையாளருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து வாடிக்கையாளரை ஊழியர் தாக்கியதில், வாடிக்கையாரின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
மேலும் குறித்த தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை குறித்த சதொச கிளையில் சில ஊழியர்கள் முகக் கவசமின்றியே கடமையில் ஈடுபடுவதாகத் பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி
சட்டத்தை மதிக்காத வவுனியா சதொச ஊழியர்கள் ; பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை