கிளிநொச்சி முக்கிய கூட்டத்தில் பெண் அதிகாரி தொடர்பில் வெடித்தது சர்ச்சை? (Photos)
கிளிநொச்சி கரைச்சி புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் இன்று இடம்பெற்றது.
குறித்த கூட்டமானது பகல் 10 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெற்றது.
இதன் போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண் அதிகாரி ஒருவர், கூட்டம் இடம்பெற்றபோது கைத்தொலைபேசியில் , பயன்படுத்திக்கொண்டிருந்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அது குறித்த புகைப்படங்களை ஊடகவியலாளர் நிபோஜன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். கிளிநொச்சியின் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயம் உள்ளது.
இந்த நிலையில், இக்கட்டான ஒமிக்கிறோன் பரவலை சவாலைச் சமாளித்துக்கொண்டு புளியம் பொக்கணை கோவில் திருவிழாவை எவ்வாறு நடாத்துவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஒன்று கூடித்திட்டமிட்ட போது அப் பெண் அதிகாரி கூட்டத்தை கவனிக்காமல் கைபேசியில் மூழ்கியிருந்தமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.



