யாழ்.போதனா வைத்தியசாலையில் நடந்தது என்ன? தீவிர விசாரணையில் இறங்கிய பொலிஸார்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான எக்ஸ்- ரே இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அது வேண்டுமென்றே உடைக்கப்பட்டதா? என கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி நவீன எக்ஸ் - ரே இயந்திரம் மிக அண்மையில் பொருத்தப்பட்ட நிலையில் இயந்திரத்தில் ஒரு முக்கியமான பகுதி கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வேண்டுமென்றே குத்தி உடைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை முன்னரும் ஒரு தடவை இயந்திரத்தின் முக்கிய பகுதி களவாடப்பட்ட நிலையில் அது கண்டுபிடிக்கப்படவில்லை.
அதன் பின்னர் புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு 4வது நாளில் முக்கிய பகுதி உடைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பொலிஸ் தடயவியல் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.