காற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க: உடல் எடை சிக்கிரம் குறையும்!
கற்றாழையில் உள்ள நச்சு நீக்கும் தன்மையால், உடல் எடையை குறையும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கற்றாழை சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றுவது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, உடல் எடையை குறைக்க, கற்றாழையை ஒன்றல்ல பல வழிகளில் உட்கொள்ளலாம். கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகள் போன்றவை இதில் அடங்கும். கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலிக் அமிலம், கோலின், பி1, பி2, பி3 மற்றும் பி6 உள்ளன.
கற்றாழையில், வைட்டமின் பி 12 மற்றும் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், குரோமியம், செலினியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சுமார் 20 வகையான தாதுக்களை உள்ளன. இதுவே முழு உடலின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
உடல் எடையை குறைக்க கற்றாழையை இவ்வாறு பயன்படுத்துங்கள் :-
வெதுவெதுப்பான நீரில் கற்றாழையை சாப்பிடவும் : உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் கற்றாழையை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம். கற்றாழையின் அதிகபட்ச நன்மைகளைப் பெற, இப்படி உட்கொள்ளவதே சிறந்த வழியாகும்.
தேனுடன் கலந்து கற்றாழையை சாப்பிடவும் : கற்றாழை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும். இதனால் அதன் சுவை இன்னும் சிறப்பாக இருக்கும்.
எலுமிச்சையுடன் கலந்து கற்றாழையை சாப்பிடவும் : ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு சேர்க்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்தக் கரைசலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தொடர்ந்து கிளறிக்கொண்டே சூடுபடுத்தவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிடவும்.