காதலர் தினத்தில் நாய்களுக்கு திருமணம் !
காதலர் தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தங்களது அன்பினை பலவிதமாக வெளிப்படுத்தினர். சிலர் காதலர் தினத்தன்று வீம்புக்கு என்றே எதையாவது ஏடாகூடமாக செய்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.
அந்தவகையில், இந்த வருடமும் சிலர் நூதன முறையில் காதலர் தினத்தை எதிர்த்துள்ளனர். தமிழ்நாட்டில் , விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தென்சிறுவளூர் என்ற பகுதியில் காதலர்தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் நாய்களுக்கு திருமணம் செய்துவைத்ததாக கூறப்படுகின்றது.
அதேபோல திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தில் இந்து முன்னணி அமைப்பினர் நேற்று 2 தெருநாய்களை பிடித்து அவற்றுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.