நண்பர்கள் விசமத்தனம்; வைரலாகும் திருமண வாழ்த்து பனர்!
திருமண வீடுகளில் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் வாழ்த்க்களை தெரிவிப்பது வாடிக்கையாக உள்ள நிலையில் சில வாழ்த்துக்கள் வைரலாகுகின்றன.
இந்நிலையில் திருமண ஜோடியொன்றை வாழ்த்த நண்பர்கள் தயாரித்த வாழ்த்து பனர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள மானாமதுரையில் இடம்பெற்றுள்ளது.
அங்கு நடைபெறும் ஒரு திருமண விழாவிற்காக மானா மதுரையைச் சேர்ந்த மணமகனின் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி, மது பாட்டில்களின் பெயர்களை அடைமொழியாக தங்களது பெயரோடு சேர்த்து பனர் அடித்து திருமண மண்டபம் முன்பாக வைத்துள்ளனர்.
அதாவது நண்பகள் அச்சிட்ட அந்த பனரில் கல்யாணம் உங்களுக்கு, கட்டிங் எங்களுக்கு என்ற வாசகம் பொறித்துள்ளதுடன் , மதுப் போத்தல்களின் அடைமொழியோடு நண்பர்களின் பெயர் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வாழ்த்து பனர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.