நம்புரா மூஞ்சிகளா இது: போனில் கலாய்த்த விஜய்! ஷாக்கான இருவர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுதொடர்பில் இன்று படக்குழுவினர் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் ஜோடியாக முதல்முறையாக தமிழில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இதேவேளை இதற்கு முன்னர் சிவாகார்த்திகேயன் நடித்து வெளியான டாக்டர் படத்தை எப்படி புரமோஷன் செய்தார்களோ அதே பாணியில் நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடலுக்கு பிரமோஷன் செய்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் அனிருத் நெல்சன் ஆகியோருடன் போன் காலில் தளபதி விஜய் இணைந்து ஒரு கலகலப்பான காணொளி உருவாக்கி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டனர்.
குறித்த காணொளியில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடலை அனிருத் பாடிய போது நடிகர் விஜய் நாளைக்கு இந்த பாடலை எடுத்துக்கிட்டு வீட்டிக்கு வாங்க உங்களால நம்ப முடியாது நம்புரா மூஞ்சிகளா இது என கமொடியாக கூறியுள்ளார்.