பிரித்தானியாவில் அதிகரிக்கும் ஓமிக்ரோன் பரவல்: ஊரடங்கு தொடர்பில் பிரதமரின் பதில்!
தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா மாறுப்படான ஓமிக்ரோன் வைரஸ் பிரித்தானியாவில் தற்போது தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாத்தில் 90,629 பேர் பாதிக்கப்பட்டதோடு 172 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1கோடியே 15 இலட்சத்து 42ஆயிரத்து 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 47 ஆயிரத்து 433 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 15 இலட்சத்து 21 ஆயிரத்து 612 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 859 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் 46,557 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 98 இலட்சத்து 73ஆயிரத்து 098 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, நாட்டில் Omicron பரவல் அதிகரித்து வரும் நிலையில் , உடனடியாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட மாட்டாது என பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson) கூறியுள்ளார்.