ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்!
பிலியந்தலையில் உள்ள ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின்மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றுகாலை பத்திரிகையாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டிற்குள், வெள்ளை நிற வாகனமொனறில் முகத்தை மறைத்துக் கொண்டு, ஆயுதங்களுடன் நுழைந்த குழுவினர் வீட்டின்மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரியின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்திய பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் ஊடகவியலாளர் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வீட்டுத் தொகுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் தனது வீட்டின் மீது கற்களை வீசியதாக ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்துடன் , தனது வீட்டின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பல துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார்.
இதனையடுத்து உடனடியாக சம்பவம் குறித்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளனர்.