பிரித்தானியா பல்பொருள் அங்காடிகளில் முதல்முறையாக அறிமுகமாகும் உணவுப்பொருள்
பிரித்தானியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் முதல் முறையாக, நறுக்கும்போது கண்ணீரை வரவழைக்காத வெங்காயம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வெங்காயம் பிரித்தானியாவில் முதல் முறையாக வெயிட்ரோஸ் கடைகளில் அறிமுகமாக உள்ளது
அமெரிக்காவில் Sunions என தொடங்கப்பட்ட குறித்த பிராண்ட், வெங்காயத்தை 30 வருடங்களுக்கு மேலாக இனப்பெருக்கம் செய்து, வெட்டும்போது வெளிப்படும் ஆவிகள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இல்லை என்று கூறியது.
குறித்த வெங்காயங்களின் மூன்று பொக்கெட்டுகள் 1.50 பவுண்டுகளுக்கு விற்பனைக்கு வரவுள்ளது. இது Waitrose-ன் சொந்த பிராண்ட் வெங்காயத்தின் நான்கு பொக்கெட்டுகளை விட 30 பென்ஸ் அதிகம்.
மேலும், இந்த வெங்காயங்கள் மரபணு மாற்றம் செய்யப்படவில்லை, பதிலாக இனப்பெருக்கம் (bred) செய்யப்படுவதாக Sunions கூறியுள்ளது.
இந்த வெங்காயங்களில் உள்ள சுவை மற்ற வெங்காயத்தை விட வித்தியாசமாக உருவாகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sunions ஏற்கனவே அமெரிக்காவில் விற்பனையில் உள்ளது. அனால் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.
இந்த Sunions வெங்காயங்களை மிகவும் இனிப்பானவை மற்றும் வாசனை இவை என்றுகூறப்படுகிறது.