உலகிலேயே மிகவும் நீண்ட முடக்கநிலை: முடிவுக்கு கொண்டு வந்த நாடு!
உகாண்டா நாட்டில் இரண்டு ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு முடக்கநிலை முடிவுக்கு வந்துள்ளது.
உலகிலேயே மிக நீண்ட முடக்கநிலை இதுவே என்று கருதப்படுகிறது. 44 மில்லியன் பேர் வசிக்கும் உகண்டா நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முடக்கநிலை அமல்படுத்தப்பட்டது.
சென்ற வருடம் (2021) பெப்ரவரி மாதத்தில் சில பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் ஜூன் மாதத்தில் முழுமையான முடக்கநிலை மீண்டும் நடப்புக்கு வந்தது. அப்போது கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்ததிருந்தது.
இந்நிலையில் முடக்கநிலை தற்போது அகற்றப்பட்டதைத் தொடர்ந்து பல தொழில்துறைகளும் பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் உட்பட மக்களில் பெரும்பாலோர் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்குத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.