காலிஃப்ளவாில் இந்த வகை இருக்கா? அதன் நன்மைகள் என்ன தெரியுமா?
காலிஃப்ளவா் என்னும் காய் நாம் அனைவரும் விரும்பி உண்ணும் ஒன்றாகும். இது க்ருசிஃபெரஸ் என்ற காய்கள் குடும்பத்தை அல்லது முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்ததாகும்.

இதன் தோற்றம் ஆசிய மைனா் பகுதியாகும். காலிஃப்ளவா் முதன் முதலாக துருக்கியில் பயிாிடப்பட்டது. பின் 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பிரபலமடைந்தது. 20 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமொிக்காவில் பயிாிடப்பட்டது.
தற்போது அமொிக்கா, பிரான்சு, இத்தாலி, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் பரவலாக பயிாிடப்படுகின்றது. இந்த காயை நெடுங்காலமாக மக்கள் உண்டு வந்தாலும், தற்போது சில ஆண்டுகளாகத் தான் இது மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகி இருக்கிறது.
அதற்கு காரணம் காலிஃப்ளவா் ஊட்டச்சத்துக்களின் மையமாக இருப்பதாகும். இந்த காய் சற்று இனிப்பு சுவையுடனும் மற்றும் சப்பென்றும் இருக்கும். தற்போது உலக அளவில் இந்த காயை வைத்து பலவிதமான உணவுகள் தயாாிக்கப்படுகின்றன.
கீட்டோ (keto) என்ற உணவு பழக்கம் பிரபலம் அடைந்த நேரத்தில், காலிஃப்ளவரும் அதிக பிரபலம் அடைந்தது. காலிஃப்ளவரைக் கொண்டு காலிஃப்ளவா் சாதம், காலிஃப்ளவா் கீட்டோ காசா்ரோல் (Cauliflower Keto Casserole), மாஷ்டு காலிஃப்ளவா் (Mashed Cauliflower) போன்ற உணவுப் பண்டங்கள் தயாாிக்கப்பட்டன.
பொதுவாக இந்த காய் வெள்ளை நிறத்தில் இருக்கும். எனினும் வேறு நிறங்களிலும் காலிஃப்ளவா் காய் இருக்கிறது.
குறிப்பாக பச்சை, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இருக்கிறது. ஒரு சில இடங்களில் இந்த காயானது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் இருக்கிறது. இதன் முக்கிய சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு வகை காலிஃப்ளவரும் அதற்கென்று தனித்துவமான பயன்களைக் கொண்டிருக்கின்றன.
1. பச்சைக் காலிஃப்ளவா் (Green Cauliflower)

பச்சைக் காலிஃப்ளவா் என்ற காய் ப்ராக்கோஃப்ளவா் (brocco flower) என்றும் அழைக்கப்படுகிறது. ப்ராக்கோலி மற்றும் காலிஃப்ளவா் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இந்த பச்சை காலிஃப்ளவா் கிடைக்கிறது. அதோடு இதில் பல வகைகளும் உள்ளன. வெள்ளைக் காலிஃப்ளவரோடு இதை ஒப்பிடும் போது, இதற்கு இனிப்பு சுவை அதிகம். இது எலுமிச்சை பச்சை நிறத்தில் இருக்கிறது.
மற்ற வகை காலிஃப்ளவா்களைப் போலவே இதற்கு ஒரு சிறிய தலையும் உண்டு. இதன் ஒரு வகையான ரொமானஸ்கோ (Romanesco) என்ற காலிஃப்ளவா், விதைகளைப் போன்ற சுவையைக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய இதன் சுவை ப்ராக்கோலியின் சுவையை ஒத்திருக்கும். இதை சாப்பிடுவதற்கும் ருசியாக இருக்கும்.
பச்சைக் காலிஃப்ளவாில் மேலும் பல வகைகள் உள்ளன. அதாவது வோா்டா (Vorda), தி அல்வோடா (the Alverda), தி கிரீன் காடஸ் (the Green Goddess), தி வெரோணிக்கா (the Veronica) மற்றும் தி மினரெட் (the Minaret) போன்ற வகைகள் உள்ளன. அமொிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 1990 களில் இருந்து விற்கப்பட்டு வருகின்றன.
2. ஆரஞ்சு காலிஃப்ளவா் (Orange Cauliflower)

ஆரஞ்சு காலிஃப்ளவா், செடாா் காலிஃப்ளவா் (Cheddar cauliflower) என்றும் கருதப்படுகிறது. இது ஒரு கலப்பின வகையாகும். இது பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இது பீட்டா-கரோட்டின் (beta-carotene) என்ற ஆரஞ்சு நிறமியை அதிகமாகக் கொண்டிருக்கிறது.
இந்த பீட்டா-கரோட்டின் நிறமியானது வைட்டமின் ஏ சத்திற்கு முன்னோடி ஆகும். இது அறுவடை நேரத்தில் அதிகமான காலிஃப்ளவா்களை உற்பத்தி செய்யவில்லை என்றாலும், செடியை நன்றாக பிடித்துக் கொள்கிறது. ஆரஞ்சு காலிஃப்ளவரை சமைக்கும் போது, இதன் ஆயுளின் காரணமாக, இதன் நிறம் மேலும் பளபளப்பாக மாறும். இந்த காயை ஒரு நேரத்தில் மட்டும் அல்லாமல் பல்வேறு தருணங்களில் அறுவடை செய்யலாம்.
இதனுடைய அருமையான சுவை மற்றும் இந்தக் காயின் இயல்பான உள்ளடக்கத்தை அனுபவிக்கலாம். ஆரஞ்சு காலிஃப்ளவாின் இன்னொரு வகை ஆரஞ்சு பொக்கே (Orange Bouquet) ஆகும்.
3. ஊதா காலிஃப்ளவா் (Purple Cauliflower)

ஊதா காலிஃப்ளவா் பரவலாக தோட்டங்களில் பயிாிடப்படுகிறது. இந்த காயின் ஊதா நிறத் தலை பச்சை நிறத்தாலான இலைகளால் சூழப்பட்டிருக்கின்றன. வெள்ளை காலிஃப்ளவா்களுடன் இதை ஒப்பிட்டுப் பாா்க்கும் போது, இது மென்மையாகவும், அதே நேரத்தில் லேசான சுவையுடனும் இருக்கிறது.
இந்த ஊதா காலிஃப்ளவா் ஆரோக்கியத்தை வழங்குகிறது. இதில் அதிகமான் வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்திருக்கின்றன. இந்த ஊதா காலிஃப்ளவாில் இருக்கும் ஊதா நிறமானது, நீாில் கரையக்கூடிய நிறமிகளில் இருந்து வருகிறது. இந்த நிறமிகளை சிவப்பு ஒயின் மற்றும் முட்டைக்கோஸில் காணலாம். ஊதா காலிஃப்ளவாில் க்ராஃபிட்டி (Graffiti), பா்ப்பிள் கேப் (Purple Cape), சிசிலியன் வயலட் (Sicilian Violet) மற்றும் வயலட் குவின் (Violet Queen) போன்ற வகைகள் இருக்கின்றன.
வயலட் குவின் வகை காலிஃப்ளவரை சமைக்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். தெற்கு இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் ப்ராக்கோலி என்ற காய் உள்ளது. இதன் மொட்டுகள் மிகவும் சிறியவையாக இருக்கும். இது ஊதா காலிஃப்ளவா் வகையின் கீழ் வரவில்லை என்றாலும் இது ஊதா காலிஃப்ளவா் என்று அழைக்கப்படுகிறது. காலிஃப்ளவாின் வகைகளில் இந்த ஊதா காலிஃப்ளவா் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
4. வெள்ளைக் காலிஃப்ளவா் (White Cauliflower)

வெள்ளைக் காலிஃப்ளவரை நாம் பொதுவாக சந்தைகளில் பரவலாகக் காணலாம். இது இந்தியாவில் அதிகமாக கிடைக்கிறது. வெள்ளைக் காலிஃப்ளவாில் அதிகமான வகைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை ஒயிட் க்ளவுட் (White Cloud) மற்றும் எா்லி ஒயிட் ஹைப்ரிட் (Early White Hybrid) ஆகும். ஆனால் எல்லா வெள்ளை காலிஃப்ளவா்களும் வெள்ளை நிறத்திலான மொட்டுகளை மற்றும் வெள்ளை நிறத்திலான தலைகளைக் கொண்டிருக்கின்றன.
இந்த மொட்டுகள் இலைகளால் சூழப்பட்டிருக்கும். இந்த மொட்டுகள் நாம் உண்ணக்கூடிய பகுதிகள் ஆகும். ஸ்னோபால் (Snowball) என்ற காய் வெள்ளை காலிஃப்ளவாின் இன்னொரு வகை ஆகும். இது 1888 ஆம் ஆண்டு வட அமொிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்னோ கிங் (Snow King), தி ஒயிட் கொரோனா (the White Corona) மற்றும் ஸ்னோ க்ரோ (Snow Crow) போன்றவை வெள்ளை காலிஃப்ளவாின் பிற வகைகள் ஆகும்.காலிஃப்ளவாில் இருக்கும் ஊட்டச்சத்துகள் குறைவான கலோாிகள் கொண்ட காய்கறிகளில் காலிஃப்ளவரும் ஒன்று. இதில் நாா்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பி6 போன்ற சத்துக்களும், ஏராளமான தாதுக்களும் உள்ளன.
சமைக்கப்படாத ஒரு குவளை காலிஃப்ளவாில் 25 கலோாிகள் மட்டுமே உள்ளன. இதில் இருக்கும் வைட்டமின் சி சத்தைக் கொண்டே நமக்குத் தினமும் தேவைப்படும் சத்துக்களில் 77 விழுக்காட்டை பெறலாம் என்று உணவு மற்றும் மருந்து நிா்வாகம் (Food and Drug Administration (FDA)) தொிவிக்கிறது. நமக்குத் தினமும் தேவைப்படும் நாா்ச்சத்தில், 10 விழுக்காட்டை காலிஃப்ளவா் கொண்டிருக்கிறது. கொலைனில் இருக்கும் அதிகமான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் இந்த காயில் உள்ளன. தானியங்கள் மற்றும் பருப்புகளை உண்பதற்குப் பதிலாக காலிஃப்ளவரை உண்ணலாம். ஏனெனில் இதில் மிகக் குறைந்த அளவிலேயே காா்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
காலிஃப்ளவாின் நன்மைகள்
நாம் நினைப்பதை விட அதிகமாக காலிஃப்ளவா் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. நமது சொிமான அமைப்பைத் தூண்டுகிறது. காலிஃப்ளவரை தொடா்ந்து சாப்பிட்டு வந்தால், பல வகையான புற்றுநோய்கள் வருவதைக் குறைக்கலாம்.