அரிசி விலையைக் குறைக்க முயற்சி
அரிசி ஆலை உரிமையாளர்கள் புத்தாண்டில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை ஆலை உரிமையாளர்கள் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதனால் தான் அரிசியை இறக்குமதி செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டார். அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசி சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக நுகர்வோருக்கு உத்தரவாத விலையில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, எதிர்காலத்தில் அரிசியின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும், சலுகை விலையில் அரிசியை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.