உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல்!
இந்தியா உடனான திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய கோரி உயர் நீதிமன்றில் மற்றுமொரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு தாக்கல் எல்லே குணவன்ச தேரர் (Elle Gunavansa Thera) மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளது.
குறித்த முடிவினை எட்டுவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் அமைச்சரவைக்கு அதிகாரம் இல்லை எனவும், ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.
ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சரவை உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் நிறுவனம், பாதுகாப்பு செயலாளர் உட்பட 47 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தேசிய பிக்கு முன்னணியின் செயலாளர் வணக்கத்துக்குறிய வக்முல்லே உதித்த தேரரும் இது தொடர்பில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.