திருகோணமலையில் விசேட அதிரடிப்படையினரிடம் மர்ம பொருளுடன் வசமாக சிக்கிய நபர்!
திருமலை- கப்பல்துறை பகுதியில் 1.68 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இச்சம்பவம், கந்தளாய் – சூரியபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு (12-02-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த கைது சம்பவம் குறித்து தெரியவருவது, விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் வசமாக சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தின் போது திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த 38 வயதான டேவிட் சுசந்த குமார என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் விசாரணைகளின் பின்னர் அவரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.