தேர்தல் தள்ளிபோனதற்கு இது தான் காரணமாம்
இலங்கையில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டை 2 வருடங்கள் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்தது.
இந்தக் காலப்பகுதியில் உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை அவர்கள் உரிய முறையில் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாடு தற்போது கொரோனாவை எதிர்கொள்கிறது. இதனால் உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாதுள்ளது. இந்த நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டவை.
இதன் காரணமாக ஒரு வருடத்திற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.