சாரதி அனுமதி பத்திரம் பெறுபவர்களில் 10 சதவீதமானவர்கள் இவர்களே !
வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருவோரில் 10 சதவீதமானவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தந்தோரை தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஒருநாளில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1 ஆயிரத்து 213 பேரில் 145 பேர் போதைபொருளை பயன்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் போதைபொருளை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிரேஸ்ட பொலிஸ் ஊடகபேச்சாளரும், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.