தவறை சுட்டிக்காட்டிய இளைஞன்; கௌரவித்த கூகுள்!
இந்தியாவின் மணிப்பூர் ஐ.ஐ.டி.யில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் ரிதுராஜ், கூகுள் சர்ச் என்ஜினில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டிய நிலையில் அதனை கூகுள் நிறுவனமும் ஏற்றுக்கொண்ட தோடு, அவருக்கு விருது வழங்கியும் கவுரவித்துள்ளது.
கூகுளின் தவறை பீகாரைச் சேர்ந்த 19 வயது ரிதுராஜ் கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவரை தங்களது ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் கூகுள் நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது. இது குறித்து ரிதுராஜ் கூறுகையில்,
“தவறுகளைச் சுட்டிக் காட்டியதும் கூகுள் நிறுவனத்திடமிருந்து நன்றி தெரிவித்து எனக்கு மெயில் வந்தது. என்னை ஆராய்ச்சியாளர் பட்டியலில் இணைத்திருப்பதாகத் தெரிவித்தனர். எனக்கு விருதும் அளித்தனர்.
கூகுள் இத்தகைய குறைபாடுகளை நீக்கவில்லை என்றால், கூகுளை ஹேக்கர்கள் ஹேக் செய்து தேவையான தரவுகளை திருட முடியும் எனவும் அவர் கூறினார். அதோடு இந்தக் குறைபாடு நிறுவனத்துக்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்.
இதுபோன்ற குறைபாடுகளைக் கண்டுபிடித்தால் பல பெரிய நிறுவனங்களும் கூகுள் நிறுவனம் போல் சன்மானம் வழங்குவது வழக்கம்” என்றார்.
இந்த நிலையில் ரிதுராஜின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து அவர் வசிக்கும் கிராமமே கொண்டாடி வருகிறது.