பிக் பாஸ் 5 இறுதி நிகழ்ச்சியில் ஆரிக்கு காத்திருந்த சோகம்
அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இன்று கிராண்ட் பினாலே நடைபெறவுள்ளது.மேலும் இதில் 5 ஆவது சீசன் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
மேலும் இன்று மாலை விஜய் டிவியில் அவை டெலிகாஸ்ட் செய்யப்படவுள்ளது. இந்த 5 ஆவது சீசன் துவக்கத்தில் பெரிதும் கவனிக்கப்படவில்லை.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல, பிரியங்கா, ராஜூ, தாமரை செல்வியால் சீசன் சூடுப்பிடித்து தற்போது வெற்றிக்கரமாக 106 நாட்களை நிறைவு செய்துள்ளது. பிக் பாஸ் 5 ஃபைனல்ஸ் என்றவுடன் ரசிகர்கள் ஒருவருக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
அவர் வேறு யாருமில்லை, முந்தைய பிக் பாஸ் சீசன்4 டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் தான். இவருக்கு பிக் பாஸ்நிகழ்ச்சி மூலம் கிடைத்த ரசிகர்கள் ஏராளம். ஒவ்வொரு பிக் பாஸ் ஃபைனலஸ் எபிசோடிலும் அதற்கு முந்தைய சீசனின் வெற்றியாளர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார்.
அந்த வகையில் இதுவரை ஆரவ், ரித்விக்கா, முகேன் ராவ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இருக்கின்றனர். அதே போல் பிக் பாஸ் 5ல் ஆரியும் வருவாரென அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க ஆனால் அது நடக்கவில்லை.
அத்தோடு தனது ரசிகர்கள் டிவியை பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என நினைத்த ஆரி, அவரே தனதுட்விட்டர்பக்கத்தில் ”பிக் பாஸ் சீசன் 5 ஃபனல்ஸூக்கு நான் வரவில்லை. வருத்தம் வேண்டாம்.
நானும் ஆவலுடன் போட்டியாளர்களையும், உங்களையும் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன், ஆனால் இம்முறை பிக் பாஸ் குழுவின் இருந்து எனக்கு அழைப்பு விடுக்கவில்லை” என்று அதிர்ச்சியான தகவலையும் ஷேர் செய்து இருக்கிறார். மேலும் இதனால் அவரின் ரசிகர்கள் விஜய் டிவி பிக் பாஸ் குழு மீது கோபத்தில் உள்ளனர்.
ஆரியை விஜய் டிவி கூப்பிடாமல் போனதற்கு என்ன காரணம்? என்ற பேச்சுகளும் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
I know you guys were looking forward for me in the trophy hand over segment in this bb5 finale even I was excited to meet you guys and kamal sir again but unfortunately I wasn't invited for the show. @ikamalhaasan @vijaytelevision
— Aari Arujunan (@Aariarujunan) January 15, 2022