ஒருபோதும் ஜே வி பி கூட்டணி அமைக்காது ; கே.டி. லால்காந்த
இலங்கை பொதுஜன பெரமுன, இலங்கை சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுடன் ஜே.வி.பி. ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
” ஜே.வி.பி. தலைமையிலான ஆட்சியையே நாட்டு மக்கள் தற்போது விரும்புகின்றனர், எனவே எமது ஆட்சியில் எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பது பற்றி நாம் விளக்கமளித்து வருகின்றோம்.
இதன்படி நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் எம் வசம் உள்ளதாக தெரிவித்த அவர், ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவே எமது ஜனாதிபதி வேட்பாளர எனவும், அதற்கு நானும் முழு ஆதரவை வழங்குவேன் என்றும் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
மேலும் விமல் வீரவன்ச உள்ளிட்டவர்களுக்கு எமது கட்சியிலோ அல்லது கூட்டணியிலோ இடமில்லை " என்றும் ஜே.வி.பி. இன் அரசியல் குழு உறுப்பினரான லால்காந்த கூறியுள்ளார்.