உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம்; சந்தேகநபர் விடுவிப்பு
இலங்கையில் வஹாப் வாதம், சலபி கொள்கை மற்றும் ஜிஹாத் சிந்தனையை விதைத்தமை தொடர்பில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்கைது செய்யப்பட் இலங்கை ஜமா அத்தே இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவரான உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என பரவலாக அறியப்படும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்ட மா அதிபரின் இணக்கப்பாட்டுடன், அவருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே பிணையளித்து உத்தரவிட்டார். சட்ட மா அதிபரின் இணக்கப்பாடு, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் கையெழுத்துடன் கிடைக்கப் பெற்றிருந்தது.
இந்த நிலையில், 300 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் விடுவிக்கப்ப்ட்டார்.
எனினும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்த நீதிவான், வெளிநாடு செல்வதையும் தடுத்து கடவுச் சீட்டையும் முடக்கி உத்தரவிட்டார்.