பிரபல நடிகை சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!
பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு (Raima Islam Shimu) சடலமாக மீட்கப்பட்ட சமபவ்ம் தொடர்பில் , நடிகையின் கணவர் ஷகாவத் அலி நோபல், கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
குடும்பத் தகராறில், மனைவி ரைமா இஸ்லாம் ஷிமுவை (Raima Islam Shimu) கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அவர் 3 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் நடிகை கொலை வழக்கில், ஷகாவத் அலி நோபலின் நண்பரான அப்துல்லா பார்கத்தையும் பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும், நடிகை ரைமா இஸ்லாம் ஷிமுவின் (Raima Islam Shimu) கொலையில், பிரபல நடிகர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1998 முதல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ரைமா இஸ்லாம் ஷிமு (Raima Islam Shimu) , பார்டமன் என்ற படத்தில் அறிமுகமானார்.
25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் தயாரிப்புப் பணியிலும் ஈடுபட்டிருந்த ரைமா இஸ்லாம் ஷிமு (Raima Islam Shimu), வங்கதேச திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் இணை உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
சாக்குமூட்டையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை; அதிர்ச்சியில் திரையுலகம்