கடவுள் பிறப்பதற்கு முன்பே தோன்றிய கல் மரங்களா இது? எங்குள்ளது தெரியுமா
சரியான சூழல் அமைந்தால், ஒரு மரத்துண்டு கல்லாக மாறிவிடும். தமிழகத்திலேயே "கல் மரங்கள்" உள்ளன. சில சமயங்களில் மரம் புதைந்து கரியாகி, அந்தக் கரி அழுத்தம், வெப்பம் காரணமாக பல லட்சம் ஆண்டுகள் கழித்து வைரமாகவும் மாறும்.
படத்தில் உள்ள ஓபெல் கல்மரம், க்வார்ட்ஸ் கல்லாக மாறியுள்ளது. இந்த மரக்கல்லின் வயது, 225 மில்லியன் வருடங்கள் என சொல்கின்றனர். ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம் வருடங்கள், அப்போ நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.
இதேவேளை, உலகத்தில் முக்கால்வாசிப்பேர் கும்பிடும் இயேசு பிறந்தே 2000 வருஷம்தான் ஆகுது. தங்கத்தால் ஆன காமதேனு கன்னுக்குட்டி சிலை செய்யப்பட்டு சுமார் 3000 ஆண்டுகள்தான் ஆகுது. கிரீடம் வைத்த இந்து கடவுள்களின் சிலைகள் தமிழகத்தில் நுழைந்ததே சுமார் 1400 வருடங்களுக்கு முன்னாடி, பல்லவர்கள் காலத்தில்தான்.

ஏறத்தாழ இதே காலகட்டத்தில் தான் முகமது நபி அரேபியாவில் பிறந்து அங்குள்ளவர்களுக்கு அல்லாஹ் அப்படீன்னு ஒரு கடவுளை அறிமுகப்படுத்தினர்.
அப்போ, 225 மில்லியன் வருடங்களுக்கு முன்னாடி இந்த மரத்தைப் படைச்சவன் யாரு? டைனோஸர்களைப் படைச்சது யாரு? டைனோஸர்கள் வாழ்ந்த ஜுராஸிக் யுகத்திலேயே வாழ்ந்த கொசுக்கள், மூட்டைப்பூச்சிகள், ஆமைகள், முதலைகளைப் படைத்தவன் யாரு? உங்க கடவுள்கள் பிறந்தே 3000 வருசம்தானே ஆகின்றது.
ஒரு சாமி, அதுக்கு ஒரு சடங்கு இதெல்லாம் இல்லேன்னா, உங்க மனைவியோட நடந்த திருமணம் செல்லுபடியாகாது. திருமணமே செல்லாதுன்னா, உங்க வாரிசும் செல்லாது. வாரிசு இல்லேன்னா, உங்க சம்பாத்தியத்துக்கு, உங்க சொத்துக்கு ஒரு அர்த்தமில்லாம போயிடும்.
மன திருப்திக்காக ஒரு சாமி, அதுக்கு சில சாங்கியங்களை வைத்துகொள்ளுங்கள், தப்பில்லை. கவலை, நிச்சயமற்ற எதிர்காலம், தோல்விகள், விபத்துகள் இப்போவெல்லாம் உங்களுக்கு ஒரு நம்பிக்கை வேணுமில்லையா? அதுக்காக ஏதோ ஒரு சாமியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அதற்காக எங்க சாமி சக்திவாயந்தது, உங்க சாமி சக்தி குறைவானது என மோதலில் ஈடுபடாதீர்கள். என முகநூலில் நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.