மட்டக்களப்பில் உணவகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை
மட்டக்களப்பில் உள்ள உணவகங்களை நேற்று சோதனையிட்டதில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத நான்கு உணவகங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
இரவு நேரங்களில் உணவகங்களில் உணவு வழங்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் மிதுன் ராஜ், அமிதாப் மற்றும் கிஷான் ஆகியோர் இந்த சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரபல உணவகம் உட்பட நான்கு உணவகங்கள் விதிமுறைகளுக்கு இணங்காதவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றிற்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு உணவகத்துக்கு 60,000 ரூபாயும், மற்ற மூன்று உணவகங்களுக்கு 10,000 ரூபாயும் அபராதம் விதித்ததுடன், கடும் எச்சரிக்கையும் விடுத்தது.