நாட்டில் மீண்டும் நடமாட்டத் தடையா? வெளியான தகவல்
நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் நடமாட்டத் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போதைய கொரோனாப் பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவதற்கோ அல்லது நடமாட்டத்தடை விதிப்பதற்கோ தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன (ChannaJayasumana) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை (05-02-2022) ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் நாட்டை முடக்குவதற்கான தேவையில்லை என்றும், கொரோனாப் பரவலில் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கு செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியமாகும் எனவும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.